கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் இயற்கை வழிகள்...

இன்றைய காலத்தில் கூந்தல் பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பலர் பல முறைகளை பின்பற்றுகிறார்கள். அதிலும் அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணத்தை செலவழித்து கூந்தலை பராமரிக்கிறார்கள். இதனால் கூந்தல் உதிர்தல் குறையும். ஆனால் கூந்தல் வலுவிழந்து காணப்படும். மேலும் அவை நீண்ட நாட்கள் நிலைக்காது.

மீண்டும் கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தும். எனவே அவ்வாறு கூந்தல் உதிராமல் இருக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமென்று கேட்கிறீர்களா? அதற்கு ஒரே வழி இயற்கைகை முறையை கடைபிடிப்பது தான். இயற்கைப் பொருட்கள் தான் எப்போதும் சிறந்தது என்று அனைவருக்குமே தெரியும். அதுமட்டுமின்றி, அத்தகைய பொருட்களில் தான் அனைத்து சத்துக்களும் இருக்கின்றன. ஆகவே கூந்தல் உதிராமல் இருக்க வேண்டுமென்று நினைத்தால், செயற்கை முறையை கடைபிடிப்பதை தவிர்த்து, இயற்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும்.


  • எண்ணெய் குளியல் 
ஏதாவது ஒரு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு ஷாம்பு போட்டு கூந்தலை நன்கு அலச வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் நன்கு வளர்வதோடு, உதிராமலும் இருக்கும்.
  • இயற்கையான சாறுகள் 
அதென்ன இயற்கையான சாறுகள் என்று பார்க்ககிறீர்களா? அது வேறொன்றும் இல்லை, பூண்டு, இஞ்சி அல்லது வெங்காயத்தின் சாற்றை எடுத்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து, காலையில் எழுந்து குளித்து வர வேண்டும். இதனால் முடி உதிர்வதை தடுக்க முடியும்.

  • தலை மசாஜ் 
தினமும் தலைக்கு எண்ணெய் தடவும் போது, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்கள் நன்கு வலுவடையும். அதிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் லாவண்டர் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சிறிது சேர்த்து மசாஜ் செய்வது நல்லது.


  • ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்
 வெதுவெதுப்பான கிரீன் டீயை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். ஏனெனில் கிரீம் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், கூந்தல் உதிர்தலை தடுத்து, கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

  • தியானம் 
நம்புவீர்களோ இல்லையோ, மனஅழுத்தம் இருந்தாலும், கூந்தல் உதிர்தல் ஏற்படும். எனவே மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.


Comments





Popular posts from this blog

Physics A/L Past Papers 1979 - 2017

Chemistry Past Paper Elaborations - Tamil Medium

G.C.E A/L All Tamil Physics Books