கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் இயற்கை வழிகள்...

இன்றைய காலத்தில் கூந்தல் பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பலர் பல முறைகளை பின்பற்றுகிறார்கள். அதிலும் அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணத்தை செலவழித்து கூந்தலை பராமரிக்கிறார்கள். இதனால் கூந்தல் உதிர்தல் குறையும். ஆனால் கூந்தல் வலுவிழந்து காணப்படும். மேலும் அவை நீண்ட நாட்கள் நிலைக்காது. மீண்டும் கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தும். எனவே அவ்வாறு கூந்தல் உதிராமல் இருக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமென்று கேட்கிறீர்களா? அதற்கு ஒரே வழி இயற்கைகை முறையை கடைபிடிப்பது தான். இயற்கைப் பொருட்கள் தான் எப்போதும் சிறந்தது என்று அனைவருக்குமே தெரியும். அதுமட்டுமின்றி, அத்தகைய பொருட்களில் தான் அனைத்து சத்துக்களும் இருக்கின்றன. ஆகவே கூந்தல் உதிராமல் இருக்க வேண்டுமென்று நினைத்தால், செயற்கை முறையை கடைபிடிப்பதை தவிர்த்து, இயற்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும். எண்ணெய் குளியல் ஏதாவது ஒரு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு ஷாம்பு போட்டு கூந்தலை நன்கு அலச வேண்டும். இதனை வார...