முகம் பொலிவு பெற இயற்கையான வழிகள்...

1. ஒரு தேக்கரண்டி ஓட்ஸ், இரண்டு தேக்கரண்டி தக்காளிச்சாறு, இரண்டு தேக்கரண்டி கேரட் சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி , அரை மணி நேரத்துக்கு பின் கழுவவும்.


2. தோல் நீக்கிய திராட்சையை முகத்தில் தடவி சிறிது நேரம் சென்ற பின் கழுவுவதும் முகத்துக்கு பொலிவைத் தரும்.

3. முகத்திலுள்ள பருக்களை நீக்க ஒரு பல் பூண்டு அல்லது துண்டு கிராம்பை அரைத்து அதை விரல் நுனியில் தொட்டு பரு மீது வைத்தால்,அது அப்படியே அமுங்கிவிடும்.

4. முகத்தை அடிக்கடி ப்ளீச்சிங் செய்வது சரியானதல்ல. ஏனெனில் சிலவிதமான ப்ளீச்சிங்கில் அடங்கியுள்ள அமோனியா போன்ற ரசாயனப் பொருட்கள் முக சருமத்துக்கு கேடு விளைவிக்கக்கூடும். குறிப்பாக முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது ஒவ்வாமையை விளைவிக்கும். மேலும் ப்ளீச்சிங் அதிகமானால், முகத்தில் சுருக்கங்கள் ஏற்படவும் காரணமாகிறது.



5. அடிக்கடி முகத்தை கழுவுவதனால்,முகச் சருமத்தின் இயல்பு மாற்றமடையக்கூடும். குறிப்பாக சோப்பு உபயோகித்து இப்படிக் கழுவுவதால், சோப்புகளில் உள்ள காரத் தன்மை சருமத்தை வறட்சிக்குத் தள்ளிவிடும்.

6. எண்ணெய் மயமான சருமம் உடையவர்கள் முகம் கழுவும்போது பச்சைப் பயறு மாவு உபயோகிப்பது நல்லது. இரவு உறங்கச் செல்லும் முன்னர் முகத்தை சுத்தமாகக் கழுவுவது நல்லது. எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில், முகப் பருக்கள் ஏற்பட சாத்தியம் அதிகம். தினமும் அல்லது அடிக்கடி முருங்கைக்கீரை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். பொரித்த மற்றும் வறுவல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கட்டாயமாக முகம் கழுவ சோப்பை உபயோகிக்கக்கூடாது. பயத்தமாவு அலல்து கடலைமாவு உபயோகித்து முகம் கழுவவேண்டும்.

7. நமது தோற்றத்துக்கு முதிர்ச்சி ஏறாமல் தவிர்த்து நம்மைப் பாதுகாப்பது ஆன்டி ஆக்ஸிடென்டுகளாகும். மிகவும் முன்னதாகவே ஏற்படும் முதிர்ச்சி, முகத்தின் சுருக்கங்கள் ஆகியவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த ஓர் அளவுக்கு இந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகளால்தான் இயலும். ஆப்பிள், ஆரஞ்சு, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், வெங்காயம், தக்காளி கேரட், பூசணி மற்றும் கீரைவகைகள் ஆகியவற்றிலும் இவை அதிகம் காணப்படுகிறது. இவைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பானது. பத்து அல்லது பன்னிரண்டு டம்ளர் தண்ணீர் தினமும் அருந்த வேண்டும். சருமத்தின் பளபளப்புக்கு தண்ணீர் மிக அவசியமானது.

8. சிலருக்கு சருமம் வறட்சியாக இருக்கும். சோப்புகளை அடிக்கடி மாற்றுவது சருமத்தின் வளர்ச்சியைக் கூட்டக்கூடும். இவர்கள் அரிசிமாவு, பால், கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை கலந்துமுகத்தில் பூசிக் கொள்வதால், வறட்சியைத் தடுக்கலாம். குளித்து முடித்ததும் ஒரு மாய்ச்சரைஸர் உபயோகித்து உடல் முழுவதும் மசாஜ் செய்வதும் வறண்ட சருமத்துக்கு நல்லது.

Comments

Post a Comment





Popular posts from this blog

Physics A/L Past Papers 1979 - 2017

G.C.E A/L All Tamil Physics Books